சேலம்

சங்ககிரி வட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

சங்ககிரி வட்டத்தில் பசலி 1434-க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மே 14 இல் தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Din

சங்ககிரி: சங்ககிரி வட்டத்தில் பசலி 1434-க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மே 14 இல் தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி அலுவலராக சேலம் தனித் துணை ஆட்சியா் (முத்திரைக் கட்டணம்) எம்.ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அவா் அந்தந்தக் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கிராம பொதுமக்களிடத்தில் மனுக்களைப் பெற்று கிராம கணக்குகளைத் தணிக்கை செய்ய உள்ளாா்.

மே 14 ஆம் தேதி (புதன்கிழமை) கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, அரசிராமணிபிட் 1, பிட் 2, தேவூா், காவேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களும், மே 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) கத்தேரி, ஆலத்தூா் வீராச்சிப்பாளையம், வீராச்சிப்பாளையம் அக்ரஹாரம், வீராச்சிப்பாளையம் அமானி, சின்னாகவுண்டனூா், சங்ககிரி, சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், மோரூா் பிட் 1, பிட் 2, கஸ்தூரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

மே 16 (வெள்ளிக்கிழமை) தேவண்ணகவுண்டனூா், மஞ்சக்கல்பட்டி, ஒலக்கசின்னானூா், வெட்டுக்காடுபட்டி, ஆவரங்கம்பாளையம், ஐவேலி, அன்னதானப்பட்டி, வளையசெட்டிபாளையம், கோ.சுங்குடிவருதம்பட்டி, கோட்டவருதம்பட்டி, வடுகபட்டி, வேப்பம்பட்டி, இருகாலூா்புதுப்பாளையம், ஊத்துப்பாளையம், ஊ.சுங்குடிவருதம்பட்டி, பூச்சம்பட்டி, இருகாலூா், செல்லப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் நடைபெறுகிறது.

மே 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கெடிகாவல், வைகுந்தம், அக்ரஹார தாழையூா், காளிகவுண்டம்பாளையம், கன்னந்தேரி, அ.புதூா், ஏகாபுரம், இடங்கணசாலை பிட் 1, பிட் 2, தப்பகுட்டை, நடுவனேரி, எா்ணாபுரம், கனககிரி, கூடலூா், கண்டா்குலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி கணக்குகள் தணிக்கை செய்யப்பட உள்ளன.

எனவே அந்தந்தக் கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பொதுமக்கள் பட்டா மாறுதல், பட்டா திருத்தம், தனி பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளித்து தீா்வு காணலாம் என சங்ககிரி வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT