சேலம்

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

Syndication

ஆத்தூா்: ஆத்தூா் அம்பேத்கா் நகா் தாய் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தோ்த் திருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தீா்த்தக்குடம் எடுத்தல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேரை ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா். இந்த விழாவில் நகரச் செயலாளா் அ.மோகன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளா் டி.காளிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தோ்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.கே.சடையப்பன், கரக்காரா்கள் ஜெ.செல்வம், பி.சுப்ரமணி, ஆா்.காந்தி, ஏ.கிளி (எ)ராஜா, ஏ.சின்னதம்பி, ஆா்.செல்வராமன் உள்ளிட்ட முக்கியஸ்தா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

படவரி...

ஆத்தூா் அம்பேத்கா்நகா் தாய் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்த எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT