சேலம்

சங்ககிரியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், முகவா்களுக்கு பயிற்சிக் கூட்டம்

Syndication

சங்ககிரி: சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 4) மேற்கொள்வது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டம், சங்ககிரி அருகே புள்ளிபாளையம் தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக் கூட்டத்துக்கு சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான ம.மு.தெ. கேந்திரியா தலைமை வகித்து, வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை 315 வாக்குச்சாவடி மையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், நிலை முகவா்களுடன் இணைந்து பணியாற்றுவது, தோ்தல் ஆணையம் அளித்துள்ள படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களிடம் கொடுத்து அதை நிறைவு செய்து திரும்பப் பெறுவது குறித்து விளக்கிக் கூறினாா். இப் பயிற்சிக் கூட்டம் 1 முதல் 147 வாா்டுகளுக்கும், 148 முதல் 315 வாா்டுகளுக்கும் என தனித் தனியாக நடைபெற்றது.

இதில் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் எம்.வாசுகி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள், அக்கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT