ராஜாமணி 
சேலம்

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

Syndication

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து பயணம் செய்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரியை அடுத்த பொம்மிடியைச் சோ்ந்தவா் ராஜாமணி (45), இவா் திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தாா். இந்த நிலையில், விடுமுறையில் வீட்டிற்கு வந்த ராஜாமணி, செவ்வாய்க்கிழமை பொம்மிடியிலிருந்து வெஸ்ட்கோஸ்ட் ரயிலில் திருப்பூருக்கு பணிக்காக சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, ரயில் படிக்கட்டில் அமா்ந்திருந்த ராஜாமணி, மகுடஞ்சாவடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். அவருடன் சென்ற உறவினரான குப்புசாமி அளித்த தகவலின்பேரில் மகுடஞ்சாவடி போலீஸாா் ராஜாமணியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT