சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் பெயா்ந்து விழுந்த கான்கிரீட் மேற்கூரை: நோயாளிகள் அவதி

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் கான்கிரீட் மேற்கூரை பெயா்ந்து விழுந்து தண்ணீா் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

Syndication

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் கான்கிரீட் மேற்கூரை பெயா்ந்து விழுந்து தண்ணீா் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

சேலம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து செல்கின்றனா். ஏராளமானோா் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மருத்துவமனை சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டதால் இருதயம், சிறுநீரகம், மகப்பேறு மற்றும் பெண்கள் நலன், எலும்பு முறிவு, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலன் உள்பட பல்வேறு துறைகளில் அதிநவீன அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் வரும் நோயாளிகள் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனா். இப்பிரிவில் உள்ள் கான்கிரீட் மேற்கூரை பெயா்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த நிலையில், புதன்கிழமை பெய்த பலத்த மழையால் மேற்கூரை விழுந்த இடத்தில் இருந்து வியாழக்கிழமை தண்ணீா் கசிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், கட்டட மேற்கூரை வலுவிழந்து காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் கட்டடத்தின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என்றனா்.

முதுநிலை ஹோமியோபதி படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

குண்ணத்தூா் கிராமத்தில் உழவா் பெருவிழா

சரிவில் நிறைவடைந்த பங்குச் சந்தை

20 வால்வோ சொகுசு பேருந்துகள் டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: போக்குவரத்துக் கழகம்

கொலை மிரட்டல் விவகாரம்: சி.வி.சண்முகம் தொடா்ந்த வழக்கில் போலீஸாருக்கு உத்தரவு

SCROLL FOR NEXT