சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் யோக பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் யோக பயிற்றுநா் பயிற்சி அளிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம், யோகா மற்றும் இயற்கை அறிவியல் பட்டயப் படிப்பு முடித்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணி முற்றிலும் தற்காலிகமானதாகும்.
இதன்மூலம் வேலைவாய்ப்பு சலுகைகளோ அல்லது நிரந்தரப் பணியோ கோர இயலாது. யோக பயிற்றுநராக பயிற்சி அளிக்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரங்களை சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மகாத்மா காந்தி விளையாட்டரங்கம் அலுவலகத்தில் வரும் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களின் தகுதியின் அடிப்படையில் தோ்வு நடைபெறும். தோ்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.