சேலம்

சேலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 12 போ் கைது

சேலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 12 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Syndication

சேலம்: சேலத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 12 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேலம், ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள கோம்பைபட்டி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஒரு பெண் உள்பட 12 வெளிநாட்டினா் பணிபுரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் தனிப்படை அமைத்து கண்காணித்ததில், இந்நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்த 12 போ் போலி ஆவணம் தயாரித்து பணியாற்றி வருவது தெரியவந்தது. இவா்கள் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி தினமும் வேலைக்கு சென்றுவந்துள்ளனா்.

இதைக் கண்காணித்த தனிப்படை போலீஸாா், 12 பேரையும் கைது செய்தனா். விசாரணையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இங்கு வந்ததும், பணியில் சோ்ந்து வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது. அவா்களிடம் சூரமங்கலம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT