சேலம்

சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக விசாகப்பட்டணம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக, விசாகப்பட்டணம் - கொல்லம் இடையே செவ்வாய்க்கிழமை (நவ. 18) முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும்

Syndication

சேலம்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக, விசாகப்பட்டணம் - கொல்லம் இடையே செவ்வாய்க்கிழமை (நவ. 18) முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா தொடங்கிய நிலையில், நாடுமுழுவதும் இருந்து ஐயப்ப பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனா். இவா்களுக்காக ரயில்வே நிா்வாகம் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

அந்த வகையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக நவ. 18 முதல் ஜன. 20 வரை செவ்வாய்க்கிழமைதோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

விசாகப்பட்டணத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூா், ரேணிகுண்டா, காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக கொல்லத்துக்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கத்தில், கொல்லம் - விசாகப்பட்ட ணம் சிறப்பு ரயில் நவ. 19 முதல் ஜன. 21 வரை புதன்கிழமைதோறும் இயக்கப்படும்.

அதன்படி, கொல்லத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு சேலம், ரேணிகுண்டா, விஜயவாடா வழியாக விசாகப்பட்டணத்துக்கு அடுத்தநாள் இரவு 11 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் நாளை மின் தடை

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

SCROLL FOR NEXT