மீண்டும் நிரம்பிய மேட்டூர் அணை..!
இந்த ஆண்டில் 7-ஆவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 119.69 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10,374 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,420 கன அடியாக அதிகரித்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் 7-ஆவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
The water flow into Mettur Dam has increased
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.