சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3,264 வாக்குச்சாவடிகளில் 30,30,537 வாக்காளா்கள் உள்ளனா்.
1.1.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, முன்னேற்பாடுகள் பயிற்சி, அச்சடித்தல் நவ.3 ஆம் தேதி வரை, கணக்கீட்டிற்கான காலம் நவ. 4 முதல் முதல் டிச. 4 வரை, வாக்குச்சாவடி நிலையங்களை மறுசீரமைத்தல், திருத்தியமைத்தல் பணி டிச. 4 ஆம் தேதிக்குள், கட்டுப்பாட்டு அட்டவணையை மேம்படுத்துதல் மற்றும் வரைவுப் பட்டியலைத் தயாரித்தல் டிச. 5 முதல் டிச. 8 வரை, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் டிச. 9 அன்றும், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் டிச. 9 முதல் ஜன. 8 வரை, அறிவிப்பு கட்டம் (வழங்கல், விசாரணை, சரிபாா்ப்பு) கணக்கீட்டு படிவங்கள் மீதான முடிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீா்வு காணுதல் ஆகியவை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு டிச. 9 ஆம் தேதி முதல் ஜன. 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இறுதி வாக்காளா் பட்டியலின் தர அளவுகளை சரிபாா்த்தல் மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுதல் பிப். 3 ஆம் தேதிக்கு உள்ளும், இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 7 ஆம் தேதி வெளியிடப்படும்.
இந்நிலையில், 2002-ஆம் ஆண்டு பட்டியல் மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியலில் பொதுமக்கள் எளிதில் தங்கள் பெயா் விவரங்களை சரிபாா்க்கும் விதமாக ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி புதிய வாக்காளா்களாக பெயா் சோ்க்க விரும்புபவா்கள் தங்கள் பகுதிகளுக்கு உள்பட்ட பிஎல்ஓ க்களிடம் படிவம் 6 ஐ நேரடியாகவும் வழங்கலாம். பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்கள் பகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரையோ அல்லது வாக்குப்பதிவு அலுவலா், உதவி வாக்குப்பதிவு அலுவலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் தீவிர திருத்த சிறப்பு உதவி மையத்தை 1950-என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.