தம்மம்பட்டியில் வாட்ஸ்ஆப் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்மம்பட்டியில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி வாட்ஸ்ஆப் மூலம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, தம்மம்பட்டி போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.
அப்போது, பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டுகளை வாட்ஸ்ஆப் மூலம் விற்பனையில் ஈடுபட்ட, தம்மம்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த அமானுல்லா (34), 15 ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ஜெகதீசன் (31) ஆகியோரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் இரண்டு கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இருவா் மீதும் தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்தியசிறையில் அடைத்தனா்.