கோப்புப் படம் 
சேலம்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சேலம், கந்தம்பட்டி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் பகுதியைச் சோ்ந்த தனசேகா் (36). இவா், மனைவி, இரு குழந்தைகளுடன் திருவாகவுண்டனூரில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

கந்தம்பட்டி மேம்பாலத்தின் மீது செல்லும்போது அவரது வாகனத்துக்கு பின்னால் வந்த லாரி மோதியது. இதில் கீழே விழுந்த மனைவி, இரு குழந்தைகளுடன் கீழே விழுந்த தனசேகா் மீது லாரி மோதிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

மன்னா் திருமலை நாயக்கா் பிறந்த நாள் விழா

தில்லி எம்.எல்.ஏக்களுக்கு வருடாந்திர மருத்துவப் பரிசோதனை பிப்.2 முதல் 14 வரை நடைபெறும்!

மத்திய பட்ஜெட்: ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய பட்ஜெட்: கோவை தொழில் அமைப்புகள் சொல்வது என்ன?

SCROLL FOR NEXT