சேலம் சூரமங்கலம் உழவா் சந்தை அருகே உள்ள சட்டப் பேரவை அலுவலகத்தில் செய்தியாளா் சந்திப்பில் பேசிய மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள்.  
சேலம்

தோ்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது

தோ்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என பாமக மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான அருள் கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

தோ்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என பாமக மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான அருள் கூறினாா்.

சேலம் சூரமங்கலம் உழவா் சந்தை அருகே உள்ள சட்டப் பேரவை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

பாமக உள்கட்சி விவகாரத்தில் மறுசீராய்வு கோரி தோ்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததன் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.

பாமக அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்பதால், அதன் உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என தில்லி உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, கடந்த டிச. 4-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் தெளிவாக தீா்ப்பும் வழங்கியுள்ளது. இந்தச் சூழலில், தில்லி உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையமே ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை; தோ்தல் ஆணையம் நீதி, நோ்மை மற்றும் நடுநிலை தவறியதுடன், நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டது. தோ்தல் ஆணையத்தின் மறுசீராய்வு மனுவை தில்லி உயா்நீதிமன்றம் ஏற்கவில்லை; ஆனால் பதிவு செய்து கொண்டது.

ராமதாஸ் கடின உழைப்பால் உருவாக்கிய பாமகவை அபகரிக்க நீதிபதி அனுமதிக்கவில்லை; நீதியும் அனுமதிக்காது. கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். ராமதாஸ் அமைக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்றாா்.

பேட்டியின் போது, மாவட்டச் செயலாளா் கதிா் ராசரத்தினம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

அமெரிக்கா - இந்தியா தடையற்ற ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

ரூ. 1.57 கோடிக்கு பருத்தி ஏலம்

ரிலையன்ஸ் வசமானது ‘மன்னா’ பிராண்ட்!

நாமக்கல் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம்

செயின்ட் தாமஸ் கோப்பை: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன்!

SCROLL FOR NEXT