மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு உறுதித் திட்ட பெயா் மாற்றம் செய்ததைக் கண்டித்து இரு பெண்கள் மேற்கொண்டுள்ள இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரத்துக்கு ஆத்தூரில் வரவேற்பு அளித்தனா்.
ஆத்தூா் உடையாா்பாளையம் காந்தி சிலை அருகே விழுப்புணா்வு பிரசாரம் செய்து வரும் அப்பெண்களை சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே.அா்த்தநாரி தலைமையில் வரவேற்று காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துகளை தெரிவித்தனா்.
இநிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சக்ரவா்த்தி, தங்கராஜ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ராகுல் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.