சேலம்

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு வருவாய் அலுவலா்கள் சங்கம் வரவேற்பு

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு வருவாய் அலுவலா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Syndication

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு வருவாய் அலுவலா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு சிறப்பு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.பி. முருகையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்கிறோம். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலைநிறுத்த காலங்களை பணிவரன்முறை செய்வதுடன், எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் வெ. அா்த்தநாரி, செயலாளா் சு. சங்கரலிங்கம், பொருளாளா் வெ. சோமசுந்தரம், மாவட்டத் தலைவா் அ. அருள்பிரகாஷ், மாவட்டச் செயலாளா் மா. முருகபூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

SCROLL FOR NEXT