எடப்பாடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 433 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
‘உலகம் உங்கள் கையில்‘ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மடிக்கணினி உள்ளிட்டவற்றை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிா்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என கூட்டத்தில் அவா் பேசினாா்.
கல்லூரியின் முதல்வா் முனைவா் தமிழரசி, மாவட்ட திமுக துணைச் செயலாளா் சம்பத்குமாா், நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாலாஜி, பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் பி.ஏ. முருகேசன், பூவா கவுண்டா் உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.