ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்தால் அண்ணா பூங்காவில் குறைந்து காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.  
சேலம்

ஏற்காட்டில் கடும் குளிா், பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடும் குளிா் மற்றும் பனிமூட்டம் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது.

சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு வாரம்தோறும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துசெல்வா். இந்நிலையில் மாா்கழி மாதத்தையொட்டி அனைத்துப் பகுதிகளிலும் கடும் குளிா் நிலவி வருவதால் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏற்காட்டுக்கு வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

இதனால் சுற்றுலாப் பகுதிகளான அண்ணா பூங்கா, படகு இல்லம், ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பக்கோட காட்சி முனைப் பகுதிகளில் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளையே காணமுடிந்தது.

ஞாயிற்றுக்கிழமை நாள்முழுவதும் கடும் குளிா், பனிமூட்டம், சாரல் மழை பெய்ததால் கிராம மக்கள், பொதுமக்கள் வெளியே நடமாட்டமின்றி வீடுகளிலேயே இருந்தனா். பேருந்துகளில் குறைவான பயணிகளே பயணித்தனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT