முகப்பு
சேலம்

எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி: இபிஎஸ்

செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி.

Updated On : 19 ஜனவரி, 2026 at 12:15 PM
இபிஎஸ் (கோப்புப்படம்)
பகிர்:

எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி, மேலும் சில கட்சிகள் வரும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

மேட்டூரில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; அதனால்தான் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு, அவற்றை நிறைவேற்றாததே போராட்டத்திற்குக்காரணம்.

அதேபோல, எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. மேலும் சில கட்சிகள் வரும். அவற்றையெல்லாம் பகிரங்கமாகக் கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம்.

காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கிறதா அல்லது வெளியேறுகிறதா எனத் தெரியவில்லை என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →