மதுரை

தாழ்தள சொகுசு பஸ்களில் மூடப்படாத கதவுகள்

மதுரை, செப். 12: மதுரையில் அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் தாழ்தள சொகுசு பஸ்களில் கதவுகள் மூடப்படாமல் இருப்பதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.  மதுரையில் பொதுமக்கள் வசதிக்காக சா

காளீஸ்வரன்

மதுரை, செப். 12: மதுரையில் அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் தாழ்தள சொகுசு பஸ்களில் கதவுகள் மூடப்படாமல் இருப்பதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

 மதுரையில் பொதுமக்கள் வசதிக்காக சாதாரண வகை, எல்.எஸ்.எஸ்., சிட்டி எக்ஸ்பிரஸ், தாழ்தள சொகுசு பஸ்கள் என மொத்தம் 656 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 சில மாதங்களுக்கு முன் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட தாழ்தள சொகுசு பஸ்களில், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 300 பஸ்கள் வழங்கப்பட்டன.  இந்த தாழ்தள சொகுசு பஸ் ஒன்றின் விலை | 20 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதற்கு மத்திய அரசு (ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில்) | 10  லட்சமும், மாநில அரசு | 5 லட்சமும் மானியமாக வழங்குகிறது. எஞ்சிய | 5 லட்சத்தை மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது.

 இந்த தாழ்தள சொகுசு பஸ்கள் அனைத்தும் நவீன முறையிலான கட்டமைப்புகள் கொண்டவை. இவற்றில் எலெக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு அம்சமாக பயணிகளின் பாதுகாப்புக்காக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

 தாழ்தள சொகுசு பஸ்களில் இத்தனை வசதிகள் இருந்தபோதிலும் அவை முறையாக இயங்கவில்லை என்ற புகார் பயணிகளிடையே எழுந்துள்ளது. இந்த சொகுசு பஸ்களில் நின்றுகொண்டு பயணிக்கும் மக்கள் பிடித்துக்கொள்ள அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் மிகவும் உயரத்தில் உள்ளன. சாதாரண உயரம் கொண்ட மற்றும் பெண் பயணிகளுக்கு அந்தக் கம்பி எட்டுவதில்லை. மேலும், இருக்கை அமைப்பும் ஏற்ற இறக்கமாக உள்ளது.

 எதிர்பாராதவிதமாக திடீரென பிரேக் பிடிக்கும்போது படிக்கட்டுக்கு முன்பு அமைந்துள்ள இருக்கைகளில் அமர்ந்துள்ள பயணிகள், பிடிப்பதற்கு கம்பிகள் இல்லாமல் தடுமாற்றத்துக்கு ஆளாகின்றனர்.

 இந்த வகையான பஸ்களில் முக்கிய அம்சமே தானியங்கி கதவுகள்தான். இது பயணிகளுக்கு பாதுகாப்பானதும்கூட. மேலும் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதைத் தவிர்க்கவே இதுபோன்ற தானியங்கிக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

 ஆனால், மதுரையில் இயக்கப்படும் ஒருசில பஸ்களைத் தவிர அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவுகளில் ஒன்று பழுதாகியுள்ளது அல்லது கதவுகள் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கூட்ட நெரிசலில் படிக்கட்டுக்கு அருகே நின்று பயணிக்கும் பயணிகளுக்கு பிடிமானம் இருப்பதில்லை.

மேடு பள்ளங்களிலோ, திடீர் என பிரேக் பிடிக்கும்போதோ பயணிகள் தடுமாற வேண்டியுள்ளது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

 மேலும் பஸ்ஸின் உள்கட்டமைப்பு அனைத்தும் இரும்பு பட்டைக்குப் பதிலாக ஏர் சஸ்பென்ஷன் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பஸ்ஸில் எலக்ட்ரானிக்ஸ் சர்க்யூட் பழுதானால் அவற்றைப் பழுதுபார்க்க அதற்குரிய பயிற்சி பெற்ற வல்லுநர்களையே எதிர்பார்க்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. மிகப் பெரிய பழுது என்றால் கணினி மூலம்தான் பழுதுநீக்கம் செய்ய முடியும்.

 இவற்றை அந்த பஸ்களை தயாரித்த தனியார் நிறுவனங்களில் மட்டுமே பழுது நீக்கம் செய்யமுடியும். போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பணிமனைகளில் இவற்றை பழுதுபார்க்க முடியாது.

 இதுகுறித்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியது:

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் கரூர், சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அரசு போக்குவரத்துக் கழக பஸ் பாடி பில்டிங் மையங்கள் இருந்தன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அவை செயலிழந்து கிடக்கின்றன.

 தாழ்தள சொகுசு பஸ்கள் மிகப் பெரிய இரு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை. குறுகிய காலத்தில் பலநூறு பஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு பஸ்ஸின் விலை | 20 லட்சமாகும். இதைவிட தரமான பஸ்ûஸ | 12 லட்சத்துக்குள் அரசு பாடி பில்டிங் மையங்களில் தயாரிக்க முடியும்.

 தரம் மற்றும் பாதுகாப்பு கருதி, அரசு பாடி பில்டிங் மையங்கள் மூலம் முன்பெல்லாம் ஆண்டுக்கு இத்தனை பஸ்கள்தான் தயாரிக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், தனியார் பஸ் தயாரிப்பு நிறுவனங்களில் அதுபோன்ற இலக்கு இல்லை. எனவே அங்கு தரத்தை எதிர்பார்க்க முடியாது என்றார்.

 இதுகுறித்து மதுரை அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் அ.வெங்கடாசலம் கூறியது:

இந்த வகை பஸ்களில் ஏற்படும் பழுதுகளை நீக்க அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்துதான் டெக்னீஷியன்கள் வரவேண்டியுள்ளது. இதனால் சில சமயங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. சொகுசு பஸ்களின் பழுதுகளை  விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT