மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்: முன்பதிவு செய்ய அழைப்பு
விருதுநகர், ஜன. 8:÷விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவ
விருதுநகர், ஜன. 8:÷விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:÷விருதுநகர், செந்திக்குமார நாடார் கல்லூரியில் வரும் 21-ம் தேதி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பொறியாளர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். 70-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள், பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
÷இம் முகாமில் பங்கேற்க விரும்புவோர், அந்தந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தங்கள் பெயர்களை உடனடியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.