பேரூராட்சி தலைவரைக் கண்டித்து டி.கல்லுப்பட்டி மக்கள் எம்.எல்.ஏ.விடம் மனு
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சித் தலைவரைக் கண்டித்தும், சாலையை விரிவுபடுத்தாமல் புறவழிச் சாலை அமைக்கக் கோரியும், அக்கிராம மக்களும், பேரூராட்சி கவுன்சிலர்களும் சேர்ந்து, திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சித் தலைவரைக் கண்டித்தும், சாலையை விரிவுபடுத்தாமல் புறவழிச் சாலை அமைக்கக் கோரியும், அக்கிராம மக்களும், பேரூராட்சி கவுன்சிலர்களும் சேர்ந்து, திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.
திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். பேரூராட்சித் தலைவராக மாணிக்கம் என்பவர் உள்ளார். இந்நிலையில், பேரூராட்சித் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தங்களை தரக்குறைவாகப் பேசுவதாகவும் தெரிவித்து, 14 கவுன்சிலர்களும் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடம் புகார் மனு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை 14 கவுன்சிலர்களும் மற்றும் டி.கல்லுப்பட்டி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு, பேரூராட்சித் தலைவருக்கு எதிராக, முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விடம் மனு கொடுத்தனர்.
Advertisement
Advertisement
மேலும், டி.கல்லுப்பட்டியில் சாலையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்குப் பதிலாக புறவழிச் சாலை அமைக்கவும் கோரி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
டி.கல்லுப்பட்டி கிராம மக்கள் சங்கத்தின் செயலர் சம்பத் கூறுகையில், கடந்த மாதம் இக்கோரிக்கையை வலியுறுத்தி தாங்கள் உண்ணாவிரதம் இருந்ததற்காக, பேரூராட்சித் தலைவர் கிராம முக்கியஸ்தர்களுக்கு நீதிமன்ற நோட்டீஸ் விட்டிருந்தார். அதனால், 14 கவுன்சிலர்களும், டி.கல்லுப்பட்டி மக்களும் சேர்ந்து மனு கொடுக்க வந்துள்ளதாகக் கூறினார்.
மேலும், சாலையை அகலப்படுத்தினால் பழமையான கோயில்களும், வணிக வளாகங்களும், சிறிய கடைகளும் இடிக்கப்படும் என்பதால், மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கும்.
எனவே, அதற்குப் பதிலாக புறவழிச் சாலை அமைத்தால், பிரச்னை இருக்காது என்றும் கூறினார்.