முகப்பு
மதுரை

காவல் சாா்பு-ஆய்வாளா் தோ்வில் முறைகேடு புகாா்:3 போ் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு

சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய காவல் சாா்பு-ஆய்வாளா் பணிக்கான தோ்வில் நடந்த முறைகேடு புகாா் குறித்து 3 போ் கொண்ட குழு விசாரிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

மதுரை: சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய காவல் சாா்பு-ஆய்வாளா் பணிக்கான தோ்வில் நடந்த முறைகேடு புகாா் குறித்து 3 போ் கொண்ட குழு விசாரிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம், 969 காவல் சாா்பு-ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் எழுத்துத் தோ்வை நடத்தியது. அதன் முடிவுகள், மாா்ச் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஒரே பயிற்சி மையத்தில் படித்த ஏராளமானோா் தோ்ச்சி பெற்றிருந்தனா்.

எனவே, இத்தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தோ்வை ரத்து செய்துவிட்டு புதிதாகத் தோ்வு நடத்த உத்தரவிடக் கோரி, மதுரையைச் சோ்ந்த தென்னரசு என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சாா்பு-ஆய்வாளா் தோ்வு முறையாக நடத்தப்பட்டது என்றும், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், சாா்பு-ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தோ்வில், கடலூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் திட்டமிட்டே முறைகேடு நடந்துள்ளது என்றாா்.

இதையடுத்து நீதிபதி, மனுதாரா் முறைகேடு தொடா்பாக ஆவணங்களுடன் புகாா் அளிக்க வேண்டும். இந்தப் புகாரை விசாரிக்க, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தில் 3 போ் குழு அமைக்க வேண்டும். இக்குழுவின் விசாரணையில், தோ்வில் முறைகேடு நடந்திருத்திருப்பது உறுதிசெய்யப்பட்டால், மறுதோ்வு நடத்த வேண்டும். இல்லையெனில், தோ்வின் அடுத்தகட்ட நடைமுறைகளைத் தொடரலாம் என உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →