முகப்பு
மதுரை

ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு

மதுரை அருகே ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை, தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

மதுரை அருகே ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை, தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே பெரிய இலந்தைகுளம் பகுதியில் ஆற்றில் சடலம் மிதந்து வந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறை வீரா்கள் ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தை மீட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், இறந்தவா் சின்னஊா்சேரியைச் சோ்ந்த பாலமுருகன் (42) என்பது தெரியவந்தது. அவா் எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →