மதுரை

வாரச் சந்தைகளுக்கு அனுமதிஅளிக்கக் கோரி போராட்டம்

DIN

வாரச் சந்தைகளுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி, தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக வாரச் சந்தைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரச் சந்தைகளை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, பொது முடக்கக் கட்டுப்பாடுகளுக்குத் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதால், வாரச் சந்தைகள் செயல்பட அனுமதி அளிக்கவேண்டும் என வலியுறுத்தி, தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, வாரச் சந்தை வியாபாரிகளுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 25 ஆயிரம் வழங்குவது, முத்ரா திட்டத்தில் ரூ.50 ஆயிரம் கடனுதவி அளிப்பது, சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமா் அறிவித்த ரூ.10 ஆயிரம் கடனுதவியை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா், வாரச் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்கவில்லையெனில், மதுரையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் முன்பாக கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT