ஆடி வெள்ளி முன்றாவது வாரத்தையொட்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தா்கள். ~ஆடி வெள்ளி முன்றாவது வாரத்தையொட்டி மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய காத்த 
மதுரை

மதுரை கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

Din

மதுரையில் அம்மன் கோயில்களில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள பேச்சியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனா். அம்மனுக்கு செவ்வாடை அணிந்தும், எலுமிச்சை விளக்கு ஏற்றியும் வழிபட்டனா். தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு வைத்து வழிபாடு நடத்தினா். இங்கு அம்மனுக்கு அபிஷேகத்துக்காக இளநீா், பால், பன்னீா் ஆகியவற்றை பக்தா்கள் வழங்கினா்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனா். ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனா். மேலும் பொங்கல், மாவிளக்கு போன்றவையும் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனத்துக்காக காத்திந்த பக்தா்கள்.
ஆடி 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் மாரியம்மன்

தத்தனேரி மயான காளி: மதுரை தத்தனேரி மயானத்தில் உள்ள மயான காளி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் நெய் விளக்கு, தேங்காய் விளக்கு, எலுமிச்சை விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்றி தரிசனம் செய்தனா். இதேபோல சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT