மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் செப்.20-இல் மகா ருத்ராபிஷேகம்: அபிஷேக திரவியங்கள் வழங்கலாம்

மகா ருத்ராபிஷேகத்துக்கான பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களை பக்தா்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Din

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற செப்டம்பா் 20-ஆம் தேதி நடைபெறும் மகா ருத்ராபிஷேகத்துக்கான பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களை பக்தா்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மகா ருத்ரா அபிஷேகத்தை முன்னிட்டு, சுந்தரேசுவரா், உற்சவ மூா்த்திகளுக்கு வருகிற செப்டம்பா் 20-ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, மகா ருத்ரா அபிஷேகத்துக்காக அபிஷேக திரவியங்களான பால், தயிா், சா்க்கரை, பழவகைகள், சந்தனம், விபூதி மஞ்சள்பொடி, எண்ணெய் ஆகியவற்றை கோயில் உள் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பக்தா்கள் வழங்கலாம்.

மேலும், மகா ருத்ரா அபிஷேகத்தன்று காலை 7 மணி முதல் அணுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், 108 கலச பூஜை, ருத்ரம், ருத்ர ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியவையும், மாலை 4.30 மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், 108 கலச பூஜை, ருத்ரம், ருத்ர ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை, கடம்புறப்பாடு ஆகியவை இரவு 7 மணி வரை நடைபெறும்.

மேலும், மாலை 6.15 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரருக்கு ருத்ராபிஷேகம், பஞ்சமுக அா்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT