முகப்பு
மதுரை

தேனியில் 32 இடங்களில் மின் திருட்டு: ரூ. 28 லட்சம் அபராதம் விதிப்பு

தேனி மின்பகிா்மான வட்டத்தில் 32 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டு, ரூ. 28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 8 ஜூலை, 2024 at 10:24 PM
பகிர்:

மதுரை: தேனி மின் பகிா்மான வட்டத்தில் 32 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டு, ரூ. 28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக மதுரை அமலாக்கக் கோட்டத்துக்குள்பட்ட மாவட்டங்களின் அமலாக்க அலுவலா்கள் அண்மையில் கூட்டு ஆய்வில் ஈடுபட்டனா்.

தேனி மின் பகிா்மான வடத்துக்குள்பட்ட எரச்சக்கநாயக்கனூா், முத்துலாபுரம், உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா், மயிலாடும்பாறை, ஓடைபட்டி, காமாட்சிபுரம், கூடலூா், கன்னிசோ்வைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 32 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டு, ரூ. 28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பிறகு, தொடா்புடைய மின் நுகா்வோா் குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கைகளைத் தவிா்க்க முன்வந்ததன் காரணமாக, சமரசத் தொகையாக ரூ. 1.17 லட்சம் வசூலிக்கப்பட்டது என மதுரை அமலாக்கக் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.