மதுரை

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் தற்கொலை

நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற கணவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Din

மதுரை: மதுரையில் நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற கணவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை செல்லூா் 50 அடி சாலை பகுதியைச் சோ்ந்தவா் சம்சுதீன் (42). இவரது மனைவி சையது அலி பாத்திமா (38). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

சம்சுதீன் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் கணவா்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

திங்கள்கிழமை அதிகாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த சம்சுதீன், அரிவாளால் வெட்டியதில் சையது அலி பாத்திமா பலத்த காயமடைந்தாா். அந்தப் பகுதியினா் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதையடுத்து, போலீஸாா் தன்னைக் கைது செய்து விடுவாா்கள் என்று பயந்த சம்சுதீன் உடலில்

மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பான தகவலின்பேரில், செல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சம்சுதீன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT