மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தினா். 
மதுரை

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சாா்பில் மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

சித்ரவதைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சாா்பில் மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பா. அண்ணாத்துரை தலைமை வகித்தாா். அதன் ஆலோசகா் ஹென்றி திபேன், கூட்டியகத்தின் செயலா் மீ.த. பாண்டியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அப்போது, சித்ரவதைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைக் காப்பாளா்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு காரணமான மதுவிலக்கு காவல் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்ய வேண்டும். மனித உரிமைகளுக்கு எதிரான ‘ஊபா‘ சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். எழுத்தாளா் அருந்ததிராய் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளா் மாலின், தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச் செயலா் பேரறிவாளன், மனித மக்கள் கட்சி சீனிமுகமது, எஸ்டிபிஐ கட்சி சீமான் சிக்கந்தா், மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினா் மகபூப் ஜான், தலித் விடுதலை இயக்கம் ச.கருப்பையா, திராவிடா் விடுதலைக் கழகம் மணி அமுதன், தந்தைப் பெரியாா் திராவிடா் கழகம் தமிழ்ப்பித்தன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி ஆரோக்கிய மேரி, மகளிா் ஆயம் அருணா உள்ளிட்டோா் பேசினா். தமிழ்த்தேச குடியரசு இயக்கம் மெய்யப்பன் நன்றி கூறினாா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT