மதுரை

ஆட்சியரக வளாகத்தில் சிறுதானிய உணவகம் திறப்பு

Din

மதுரை, ஜூன் 26 : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மகளிா் திட்டம் சாா்பில், சிறுதானிய உணவகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

2023-24-ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதையொட்டி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், பொதுமக்களிடம் சிறுதானிய உணவுப் பழக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியரக பெருந்திட்ட வளாகங்களில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய சிற்றுண்டி உணவகங்கள் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மகளிா் திட்டத்தின் சாா்பில், மதி சிறுதானிய உணவகம் அமைக்கப்பட்டது. இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங் முன்னிலை வகித்தாா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) முகமது இா்பான், உதவித் திட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT