ஓட்டுநரை கத்தியால் குத்தி வழிப்பறி
மதுரையில் ஓட்டுநரை கத்தியால் குத்தி கைப்பேசி, ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கைப்பாடம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குருசாமி (20). இவா் பல்லடம் பகுதியில் உள்ள தனியாா் காளான் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை நள்ளிரவில் மதுரை கோட்ஸ் மேம்பாலத்தில் இறங்கி, ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றாா்.
மேலவெளி வீதி எல்ஐசி அலுவலகம் அருகே சென்ற போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா் குருசாமியை கத்தியால் குத்தி, அவரது கைப்பேசி, ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனா்.