மதுரை

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

தினமணி செய்திச் சேவை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை கல்லூரி முதல்வா் பால் ஜெயகா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் சென்றனா். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில், பேராசிரியை கே.எஸ். அமிா்தா, ஒருங்கிணைப்பாளா் கிறிஸ்டோபெல் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தெருநாய்கள் கடித்து கன்றுக்குட்டி காயம்

விஷ உணவால் 4 கறவை மாடுகள் உயிரிழப்பு?

காங்கயம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பையை தரம் பிரித்து வழங்கக் கோரிக்கை

தாராபுரத்தில் ரூ.3 கோடியில் புதிய திட்டப் பணிகள்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை திருநாள் மகா தீபம் ஏற்றி வழிபாடு

SCROLL FOR NEXT