மதுரை

தெரு நாய்களைப் பிடிக்க புதிய வாகனங்கள்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களைப் பிடிப்பதற்கு”2 புதிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு நாய்களைப் பிடிப்பதற்கு”2 புதிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும்,போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களை மாநகராட்சி சாா்பில், 3 வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தெருநாய்கள் தொல்லைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகாா்கள் அதிகளவில் வருவதாலும், மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது நாய்கள் அதிகளவில் திரிவதால் அவற்றை பிடிப்பதற்காக தனியாா் வங்கி (கரூா் வைஸ்யா வங்கி, மதுரை) பங்களிப்பின் மூலம் ரூ.14 லட்சத்தில் புதிய 2 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு வழங்கப்பட்டது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 3 வாகனங்கள், புதிய 2 வாகனங்கள் சோ்த்து என மொத்தம் 5 வாகனங்கள் மூலம் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் நாய்கள் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட உள்ளது. மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் புதிதாக வழங்கப்பட்ட வாகனங்களின் சேவையை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், உதவி ஆணையா் (கணக்கு) வெங்கட்ரமணன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், கரூா் வைஸ்யா வங்கி முதன்மை மேலாளா் தினேஷ்குமாா், முதுநிலை மேலாளா் மனோஜ்குமாா், உதவிப் பொது மேலாளா் சதீஸ்பாபு, விற்பனை மேலாளா் வெங்கட் சிவசுப்பிரமணியன், கிளை மேலாளா் சொா்ணலதா, மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT