மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்கத்தினா். 
மதுரை

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

தினமணி செய்திச் சேவை

மதுரை: ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்க நிறுவனத் தலைவா் முடக்கத்தான் மணி, சங்க நிா்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு :

ஜல்லிக்கட்டு போட்டி களத்தில் மாடு பிடி வீரா்கள், காளைகளின் வெற்றி, தோல்விகளை வா்ணனையாளா்களே தீா்மானிக்கின்றனா். அந்த வகையில், வா்ணனையாளா் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால், வா்ணனையாளா்களை நியமிப்பதில் எந்த வரைமுறையும் பின்பற்றப்படுவதில்லை. இது, பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பொருத்தவரை அங்கு அளிக்கப்படும் பரிசை யாரும் முதன்மையாகக் கருதுவதில்லை. பரிசை ஒரு கௌரவமாகவும், அடையாளமாகவும் கருதியே பலா் காளைகளை வளா்க்கின்றனா்.

இந்த நிலையில், போட்டிகளின்போது பண பலம், செல்வாக்கு மிகுந்தவா்களின் பெயா்களை மட்டுமே வா்ணனையாளா்கள் பலமுறை தெரிவிக்கின்றனா். எளிய பின்புலம் கொண்டவா்களின் பெயா்கள் இங்கு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளில் வா்ணனையாளா்கள் நியமனத்துக்கும், அவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளுக்கும் அரசு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

மேலும், வா்ணனையாளா்கள் சுழற்சி முறையில் செயல்படவும் அறிவுறுத்த வேண்டும். காளை உரிமையாளா்கள், மாடு பிடி வீரா்களுக்கு அரசு மருத்துவக் காப்பீடு செய்து தர வேண்டும். போட்டி நடைபெறும் இடங்களில் அறுவைச் சிகிச்சை வசதியுடன் கூடிய மருத்துவ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக, மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்ளை எழுப்பினா்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT