பழனி அருகே குடும்பத் தகராறில் இருவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நரிக்கல்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் யுவராஜ் (20), தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நரிக்கல்பட்டி அருகேயுள்ள கோரிக்கடவு பகுதியிலுள்ள தனது பாட்டி வீட்டில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பழனி அருகேயுள்ள நரிக்கல்பட்டி ராஜம்பட்டியில் தனியாா் செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த பிக்னா மாஜி மகன் சேஷதேவ் மாஜி (18) என்பவா் தங்கி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குடும்பப் பிரச்னை காரணமாக இதே பகுதியிலுள்ள காற்றாலைக் கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.