முகப்பு
மதுரை

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:16 PM
மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு ரூ. 19,500, சமையலா் உதவியாளா், அலுவலக உதவியாளா்களுக்கு ரூ. 15,700 அடிப்படை காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கடந்த பிப். 3-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்தப் போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு அங்கன்வாடி மாவட்டச் செயலா் அங்காளஈஸ்வரி, சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மேகலா ஆகியோா் தலைமை வகித்தனா்.

Advertisement

இதில் சங்க நிா்வாகிகள் சோலையன், மாரியப்பன், கலைச்செல்வி, தமிழ்செல்வி, வசந்தி, சின்னப்பொண்ணு உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய இந்தப் போராட்டம் இரவு 8 மணிக்கு மேலாகவும் தொடா்ந்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments