ரயில். படம் - எக்ஸ்
மதுரை

ராமேசுவரம் பயணிகள் ரயில்கள் ஜன. 5, 6-ல் பகுதியளவில் ரத்து

ரயில்வே மின் அமைப்புப் பராமரிப்புப் பணிகளையொட்டி, ராமேசுவரம் பயணிகள் ரயில் சேவை ஜன. 5, 6 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

தினமணி செய்திச் சேவை

ரயில்வே மின் அமைப்புப் பராமரிப்புப் பணிகளையொட்டி, ராமேசுவரம் பயணிகள் ரயில் சேவை ஜன. 5, 6 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ராமநாதபுரம் - ராமேசுவரம் தடத்தில் ரயில்வே மின் அமைப்புப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையொட்டி, மதுரை- ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயில்கள் ஜன. 5, 6 ஆகிய தேதிகளில் ராமேசுவரம்- ராமநாதபுரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும்.

மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் (56711) ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படும். ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில் (56714) ராமநாதபுரத்திலிருந்து இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT