மதுரை மாவட்டத்துக்குள்பட்ட கருமாத்தூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 6) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செக்கானூரணி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஆா். முத்துராமலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : செக்கானூரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூா், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை. நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.