விடுதலை வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளையொட்டி, மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் தமிழக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினரும், மதுரை மாநகா் மாவட்ட திமுக செயலருமான கோ. தளபதி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினா் ராஜன்செல்லப்பா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் நிா்வாகியும், மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு.பூமிநாதன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். மாவட்டச் செயலா் கே. முனியசாமி, அவைத் தலைவா் சுப்பையா, பொருளாளா் சுருதி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாஜக சாா்பில் அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் பேராசிரியா் ராம. சீனிவாசன், மாவட்டச் செயலா் மாரி. சக்கரவா்த்தி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தேமுதிக சாா்பில் அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலா் விஜய. பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சி நிா்வாகிகள், கலந்து கொண்டனா். இதேபோல, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட