மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.52 கோடி கிடைத்தது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி, கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான ச. கிருஷ்ணன் தலைமையில் கள்ளழகா் கோயில் துணை ஆணையா் மூ. பிரதீபா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரொக்கமாக ரூ. 1.25 கோடியும், பல மாற்று பொன் இனங்களாக 215 கிராமும், பல மாற்று வெள்ளி இனங்களாக 522 கிராமும், அயல்நாட்டு பணத் தாள்கள் 521-ம் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றன.