திண்டுக்கல்

வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக  பண மோசடி: தம்பதி மீது வழக்கு

DIN

ஒட்டன்சத்திரம் அருகே வங்கியில் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி விவசாயிகளிடம் பணம் மோசடி செய்த தம்பதி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கே.மாரியப்பன் மனைவி சுகன்யா. இருவரும் கடந்த செம்டம்பர் மாதம் 5-ஆம் தேதி ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பெரியகோட்டையைச் சேர்ந்த மாடசாமி என்பவரை அணுகி தனியார் வங்கியில் குறைந்த வட்டிக்குப் பணம் பெற்று தருவதாகக் கூறியுள்ளனர். அதை நம்பிய மாடசாமி, அதே ஊரைச் சேர்ந்த பெருமாள்சாமி மற்றும் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி, மருதசாமி ஆகியோரிடம் தெரிவித்ததையடுத்து
கடன் பெற விவசாயிகள் தலா ரூ.32500 கொடுத்துள்ளனர். ஆனால் பணத்தை வாங்கி சென்றவர்கள் கடன் வாங்கி தரவில்லையாம். இதனால்  தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளனர். அதற்கு வாங்கிய பணத்தை கொடுக்காமல் தலா ரூ.20 ஆயிரம் வீதம் காசோலைகளை வழங்கியுள்ளனர். மேலும் மீதிப்பணத்தை கேட்கக்கூடாது எனவும் கூறி விவசாயிகளுக்கு மிரட்டல் விடுத்தனராம். இது குறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமையன்று மாடசாமி புகார் செய்தார். அதன் பேரில்  தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT