திண்டுக்கல்

அய்யலூர் அருகே சிறுமி கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கக் கோரி சாலை மறியல்

DIN

அய்யலூர் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு உடனடியாக தூக்குத் தண்டனை வழங்கக் கோரி, உறவினர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
       திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அடுத்துள்ள கொம்பேரிப்பட்டி செம்மணம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகள் மகாலட்சுமி (4). இக்குழந்தை,  தனது பாட்டியுடன் கொம்பேரிப்பட்டி அங்கன்வாடி மையத்துக்கு வியாழக்கிழமை நடந்து சென்றுள்ளது. அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த குப்பாம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ராஜ்குமார் (19) என்பவர், குழந்தை மகாலட்சுமியை அங்கன்வாடி மையத்தில் விட்டுவிடுவதாகக் கூறி தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.      பின்னர், அய்யலூர் அடுத்த கிணத்துப்பட்டி  மலையிலுள்ள சுடுகாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற ராஜ்குமார், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டார். இதனை அடுத்து, அய்யலூர் மற்றும் கொம்பேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பிடிபட்ட ராஜ்குமார், வடமதுரை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், குழந்தையின் சடலம் வெள்ளிக்கிழமை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அங்கு  திரண்டிருந்த குழந்தையின் உறவினர்கள், கொலையாளி ராஜ்குமார் மீதான ஆத்திரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். கொலையாளி ராஜ்குமாருக்கு உடனடியாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு துரிதமாக தண்டனை கிடைக்கும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரத்துக்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT