திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

DIN

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
   பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இது தவிர, கிருத்திகை நட்சத்திரம், திருப்பள்ளி எழுச்சி உள்ளிட்ட சிறப்பு நாள்களும் சேர்ந்ததால், சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
   படிவழிப் பாதையில் ஏராளமான பக்தர்கள் சென்றாலும், விஞ்ச், ரோப் கார் நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் டிக்கெட் பெற காத்திருந்தனர்.  மலைக் கோயிலில் இலவச தரிசனம் மட்டுமின்றி, ரூ. 200 கட்டண தரிசன வரிசையும் நீண்டிருந்தது. இதனால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரமானது.
   இரவில், தங்கமயில் மற்றும் தங்கத்தேர் புறப்பாட்டை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலாநிலை முன்பு குவிந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கூடுதலாக போலீஸார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT