திண்டுக்கல்

100 நாள் வேலை திட்டப் பணிகள்: புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதி

100 நாள் வேலைத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1299 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

DIN

100 நாள் வேலைத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1299 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பயனாளிகளுக்கான வேலை நாள்கள் 150 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளன. 100 நாள்களை நிறைவு செய்த பயனாளிகளுக்கு கூடுதலாக 50 நாள் வேலை வழங்கப்படும். அந்த நாள்களில் உறிஞ்சு குழிகள் அமைத்தல், கல்வரப்பு தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள், குளத்தின் வரத்துக் கால்வாய்களை தூர்வாருதல் போன்ற நீராதாரத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 200 நபர்களுக்குக் குறையாமல் பணிக்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் ஏதேனும் தகவல்கள் மற்றும் புகார்கள் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1299 நிறுவப்பட்டுள்ளது. அளிக்கப்படும் தகவல்கள் மற்றும் புகார்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT