பழனி அருகே மூளைக்காய்ச்சலால் சிறுவன் சாவு
பழனி அருகே மூளைக் காய்ச்சலால் செவ்வாய்க்கிழமை சிறுவன் உயிரிழந்தான்.
பழனி அருகே மூளைக் காய்ச்சலால் செவ்வாய்க்கிழமை சிறுவன் உயிரிழந்தான்.
பழனியை அடுத்த புஷ்பத்தூர் ஊராட்சி நல்லூரை சேர்ந்தவர் மதுரைவீரன். இவரது மகன் பாரதிமணி(10). 5 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். மிடாப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற இவர், பழனி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார்.
அப்போது இவருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாரதிமணி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.