திண்டுக்கல்

பாவை விழா போட்டி பரிசளிப்பு

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் நடத்தப்பட்டு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
 பழனி அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பில் பாவை விழாவையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள் நடைபெற்றன.  பாசுரங்களில் இருந்து இசைப் போட்டி, பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என நான்கு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.  இப்போட்டியில் பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 186 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.  பழனியாண்டவர் கல்லூரி பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமார் உள்ளிட்ட பலர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.  34 பேர் முதல் பரிசும், 29 பேர் இரண்டாம் பரிசும், 29 பேர் மூன்றாம் பரிசும், 21 பேர் ஆறுதல் பரிசும் பெற்றனர். மேலும் பங்கேற்ற 95 மாணவ, மாணவியருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.  பரிசளிப்பு விழாவில் பழனிக்கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, தலைமையாசிரியர் முருகானந்தம், புலவர் செல்வி மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT