புனித ஹஜ் பயணம் செல்வோருக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும், திண்டுக்கல் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 90 பேர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேர் என மொத்தம் 150 பேருக்கு, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாமில், துணை இயக்குநர் ஜெகவீரப்பாண்டியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமது கமாலுதீன், செஞ்சிலுவைச் சங்க புரவலர் என்.எம்.பி. காஜாமைதீன், ஷேக் தாவூத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.