பழனியில் ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு
பழனியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் இருந்து 25 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள்திருடிச் சென்றனர்.
பழனியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் இருந்து 25 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள்திருடிச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகர் பகுதியில் உள்ளது எம்.ஜி.ஆர் நகர். இங்கு நயினார் - கண்ணகி தம்பதி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இருவரும் தென்காசியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
திங்கள்கிழமை நயினார் வீட்டின் பின்புற கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். உடனடியாக நயினாருக்கும், பழனி நகர் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டுக் கிடந்தன. போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
பழனி நகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.