திண்டுக்கல்

பேரிடர் பணிகளுக்கான நிவாரணத்  தொகையை மத்திய அரசு வழங்குவதில்லை: அமைச்சர் சீனிவாசன்

DIN

பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு, மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை  மத்திய அரசு வழங்குவதில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். 
திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக அரசு மேற்கொண்ட  முன்னெச்சரிக்கை காரணமாக,  பெருமளவு  சேதம்  தவிர்க்கப்பட்டுள்ளது.
 இதன்  காரணமாக, எதிர்கட்சித் தலைவர்கள் கூட  மாநில  அரசை  பாராட்டும் நிலை  ஏற்பட்டுள்ளது. 
 திண்டுக்கல்  மாவட்டத்தை பொருத்தவரை கொடைக்கானல் பகுதியிலேயே  அதிக  அளவு பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. பேரிடர்  மீட்பு நடவடிக்கைகளுக்கு, மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்தியஅரசு வழங்குவதில்லை. மாநில  அரசே சொந்த நிதியை பயன்படுத்தி நிவாரணப் பணிகளை  மேற்கொள்ள வேண்டிய  நிலை  உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT