திண்டுக்கல்

பழனி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

பழனியில் கல்வி மாவட்ட அளவில் 46வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
கண்காட்சி தொடக்க விழாவிற்கு மாவட்டக் கல்வி அலுவலர் கருப்புச்சாமி தலைமை வகித்தார். 
ஜேஆர்சி ஒருங்கிணைப்பாளர் சின்ராஜ், நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் குப்புச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.  
கண்காட்சியில் பழனி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்று தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
  6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மற்றொரு பிரிவும் பிரிக்கப்பட்டு அறிவியல், கணிதம் என ஆறு வகையான தலைப்புகளில் கண்காட்சி நடத்தப்பட்டது.  
கண்காட்சியை நடுவர்கள் பார்வையிட்டு ஒவ்வொரு பிரிவிலும் மூன்று மாணவர்கள் தேர்வு செய்து பரிசு வழங்கினர்.
 கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பழனி நகராட்சி ஆணையர் நாராயணன், சுப்ரமண்யா பொறியியல் கல்லூரி அறங்காவலர் சரவணன், முதல்வர் நந்தகுமார் உள்ளிட்டோர்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். 
முன்னதாக பழனி அரசினர் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் நந்திவர்மன் வரவேற்றார்.
கண்காட்சி ஏற்பாடுகளை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்ரமணியம், மகளிர் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் கண்ணகி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT